மறைவுகள்
April 24th, 2008 by tamizbalan
சுமக்கும் சுவருக்கே
தெரியாது…!
தன்மீது இருப்பது
அழகான ஓவியமென்று…..
நிற்கின்ற கல்லுக்கே
தெரியாது…!
தன்னுள் இருப்பது
கண்கவர் சிலையென்று.
ஆற்றில் நீந்தும் மீனுக்கே
தெரியாது…!
தான் இருப்பது
புனித நதி என்று…..
எழுதும் கோலுக்கே
தெரியாது….!
தான் எழுதுவது மிகப்
பெரும் சிந்தனையென்று.
அதுபோலத்தான்…..!
புதுமைகள் புதைந்திருக்கும்
உனக்கே தெரியாது…
வெளிவரப்போவது மிகப்பெரும்
சாதனையென்று….!
காதலி
April 16th, 2008 by tamizbalanபழமொழிகள்
April 16th, 2008 by tamizbalanமுருகா! முருகா!
April 10th, 2008 by tamizbalan
மூவிரு முகங்கள் போற்றி…
அழகின் உருவே போற்றி…
மாசற்ற பதமே போற்றி…
சேவற்கொடியே போற்றி…
பன்னிரு கையே போற்றி…
தமிழ்செங்கோவே போற்றி…
சக்தி உமைபாலனே போற்றி…




