Archive for the ‘கவிதைகள்’ Category

எங்கெங்கு காணிணும்

Thursday, September 25th, 2008

              

எங்கெங்கு காணிணும் தமிழ்
நெஞ்சமுண்டு-அந்த‌
நெஞ்சத்திலே மனிதம் என்றும்
சிறப்பதுண்டு…

தமிழனின் ம‌னிதம் பார்த்தேன்
சுனாமியில்.

அந்த சுனாமியில் எங்கெங்கு காணிணும்
ஓலக்குரல்களே…
அந்த ஓலக்குரலிலே சிக்கியவன்
குமரியிலே….
அதை கண்டு மனம் வெம்பித்
துடித்தவன் இமயத்திலே…
துடித்தவனின் நெஞ்சிலே
உதிர்த்தது மனிதநேயம்…

அதனால் பேரலையின் காயங்கள்
எல்லாம் மாயம்…
எனவே தமிழும் தமிழ்நாடும் தெய்வீகம்
அங்கே சிறந்து விள‌ங்குவது ஆன்மீகம்…
ஆம்! எங்கெங்கு காணிணும் தமிழ்
நெஞ்சமுண்டு….
அந்த நெஞ்சத்திலே தமிழுக்கென்றும்
ஓரிடமுண்டு…..

புத்தகம்

Friday, May 9th, 2008

   
         

                    *  காலக்கடலில்
                        வாழ்க்கை கப்பலுக்கு
                        கலங்கரை விளக்கம்.
 
                    *  தகரத்தை தங்கமாக்கி
                        தங்கத்தை வைரமாக‌
                        பட்டை தீட்டூம் வைரம்.
 
                    *  அறியாமை ஜீவன்களால்
                        கண்டெடுக்க முடியாத‌
                        புதையல்.

                   *   சிகரம் தொட்டவர்களின்
                        வெற்றிக்கு பின்னால்
                         ஒளிரும் தாரக மந்திரம்.

                   *    மொழி முதலாக
                         மனிதன் ஈறாக‌
                         அனைத்தையும் பாதுகாக்கும்
                         அறிவுப்பெட்டகம்.

                   *   கல்விப்பாதை தெரியா
                        பேதைக்கும்
                        விழிதந்து‍ ஒளிகாட்டும்
                        வழிகாட்டி.  

                   

உறக்கம்

Wednesday, April 30th, 2008

    

   

                         என் இதயக்கல்லறைக்குள்
                         புதைத்து விட்ட ஒன்றை…
                         கோடிக்காக அலைந்து திரிந்து
                         இழந்து விட்ட ஒன்றை… 
                         தேடி அலைகிறேன் இரவின்
                         வாசத்தில்‍‍‍‍-உறக்கமாக…     
 

வாழ்க்கை முன்னேற்றம்

Wednesday, April 30th, 2008

       

     வாழ்க்கை என்பது வாழ்வதற்கென்றால்
     வீழ்ச்சி எதற்காக?

     வாழ்க்கை என்பது வீழ்வதகென்றால்
     வாழ்வு எதற்காக?
        
     உயர்வும் தாழ்வும் சேர்ந்ததுதான்
     வாழ்க்கை…   
 
     வாழ்க்கை என்பது வாழ்ந்து
     பார்ப்பதற்க்கு என்று நினை….

     அதுதான் வாழ்ககையின் முன்னேற்றம்.?
 
 

சுனாமி

Thursday, April 24th, 2008

    #3 - FAKE tsunami picture

               அள்ளி அள்ளி தந்த கடலே-நீ
               அள்ளி கொண்டு போனது ஏன்?

                தரையை மட்டும் வருடிப்
                பார்த்துக்கொண்டிருந்த-நீ
                மனித தேகத்தை வருடிப்
                பார்த்த‌து ஏன்?

                அம்மா! என்று உனை ஆரத்தழுவ
                வந்த மீனவக்குழந்தை
                கண்மூடி உறங்குகிறான்!!!!
                உனக்குள்ளே - பிணமாக….
                அவனை காணாமல் வாடி
                தவிக்கின்றது இங்கே
                ஒரு கூட்டம்- நடைப்பிணமாக….
       
                மனித கணங்கள் உனக்குள்ளே
                மன கணங்கள் எங்களுக்குள்ளே
                போதும் உனது சினம்….
                இனியும் தாங்காது எமது
                மனித இனம்….
                            

தொலைபேசி-நிலைபேசியோ!

Thursday, April 24th, 2008

                           

 தொலைபேசியே!
           தூரங்களில் நீ அலைபேசி,
           வியாபாரத்தில் நீ விலைபேசி,
           காதலிக்காக காத்திருக்கும் தவிப்பில்-நீ
           தொல்லைபேசி…
          
           எல்லாத்துறையிலும் பேசவைக்கிறாய்-நீ
           மனிதனை - ஆனால்
           உனை பேச வைத்த மனிதனை-நீ
           பேசவைத்தால்- நீ தான்
           நிலைபேசி……
          
          
               

நினைவு

Thursday, April 24th, 2008

                                       

             நினைத்து நினைத்து பார்த்தேன்
             நினைத்த பின் - உனை
             செயலாற்ற நினைத்தேன்.
             செயலாய் நீ மாறிய பின்
             காணலாய் நீ - என் நினைவில்
             நினைவே நீ கூட நிலையில்லையோ?
             என் வாழ்வில்.
                                        இப்படிக்கு
                                          மனிதன்  

தினம் தோன்றும் அதிசயங்கள்

Thursday, April 24th, 2008

          

                         

            விடியலில் புது விடியல் தந்து
            தன் கரம் பற்றி…..
            வையமதற்கு இயக்கம் தந்து
            மாலையில் மாலையிட்ட மடந்தையை
            விட்டுச்செல்லும் கதிரவன்
            முதல் அதிசயம்.
 

                  
            பருவம் கண்ட காளையாய்
            துள்ளி துள்ளி கரை வந்து
            கிடைப்பதை சுருட்டிச்செல்லும்
            கள்வனாய்….
            ஓயாமல் போராடும் குணம் தரும்
            இந்த கடலழகன்
            ஓர் அதிசயம்….

        

                     

          மடிக்க முடியா சேலையாய்-விண்
          மீன்கள் பூக்கும் சோலையாய்.
          தன் குழந்தையை காணவில்லை
          என்றால் அழுது துடிக்கும்
          தாயாய் - இருக்குமிந்த
          இருண்ட வானம்…..
          பேரதிசயம்.
         

                    
          தன் தலை உயர்த்தி உயர்ந்தவன்
          நான் என்று.
          உயர்வதென்றால்
          வானம் தொடுபவனாய்….
          தாழ்வதென்றால்
          சரிந்து மடிபவனாய்….
          இன்று வரை வானம் தொட
          போராடும் மலை
          நான்காவது அதிசயம்.

                          

  ஓர் நாளுக்குள்ளே,
            செடியன்னையிடம் கருவாகி
            மொட்டுவிட்டு பூத்து
            மாலையில் மாலையேறாவிட்டால்
            உதிர்ந்து அழகின்
            நிலையாமையை உணரவைக்கும்
            பூக்களும் அதிசயம்தான்.
           

                       
            வருடினால் தீயாய்
            சீண்டினால் புயலாய்
            வெறுத்தால் சூறாவளியாய்
            விரும்பினால் மேகத்தை குளிரூட்டி
            மழை தந்து வாழ்விக்கும்
            காற்றும் ஓர் அதிசயம்.      

சென்னை

Thursday, April 24th, 2008

       

                                    

     இமயங்களின் வரிசையாய்
     ஒளியைத்தரும் இரவுச் சூரியன்கள்
     இவைகளின் பார்வையில்….
     சிராயமைந்த சாலை-கண்ணசைத்தால்
     நொடியில் ஊற்றிடும் பாலை.
     வாழ வழியின்றி குடிபுகுந்த மனித பொம்மைகள்,
     பொம்மைகளின் பார்வையில் ஏக்கங்களின் கோர்வைகள்
     கோர்வையின் வாழ வழி கிடைக்குமா?-என்ற
     வினாவின் எச்சம்-அதுதான்
     இங்கு மிச்சம்…..   

                  
              

ஊடலும்… கூடலும்….

Thursday, April 24th, 2008

                                                

                                                 

         பரந்து விரிந்திருக்கும் வானம்-அதில்
         ஒளி தரும் சூரியன் - அதற்கு
         திரையிடும் மேகம்-இவற்றின்
         ஊடலில் சிந்தியது விண்ணீர்
         வீட்டுச்சிறையில் இருக்கும்
         மனிதருக்காக அல்ல….
         சுதந்திர தோட்டத்தில் காத்துக்
         கிடக்கும் உயிருக்காக- இதனால்
         சுதந்திர தோட்டத்தில் கிடந்த உயிர்கள்
         கொண்டது இச்சை
         பிறந்தது பச்சை.