September 25th, 2008 by tamizbalan

உலகை ஆளும் சிவனே- நீ
எந்தன் தமிழுக்கு பின்னே.
உடன் பிறந்த மொழிகளேல்லாம்
மறைந்திட்ட போதிலும்-தமிழ்
தனித்தன்மையுடன் விளங்குகிறது
இது நாள் வரையிலும்.
தமிழில்லா இடமில்லை பாரில்-தமிழ்
மூச்சிலும் இருக்கும் நமது ஊரில்.
வள்ளுவன் கண்ட இன்பத்துப்பால்-அதனினும்
மேல் எனது தமிழ்பால்.
மூன்றேழுத்து மந்திரத்தை கூறு
இறைவா! என்றேன்.
கண்ணிமைக்கும் நொடியில் தமிழ் என்றோன்
அவன்! அப்பொழுதென்றால்
உனது நாமம் என்று கேட்டேன்?
நானே தமிழ்!
தமிழே நான்!
என்றான் அவன்.
Posted in Uncategorized | No Comments »
September 25th, 2008 by tamizbalan


எங்கெங்கு காணிணும் தமிழ்
நெஞ்சமுண்டு-அந்த
நெஞ்சத்திலே மனிதம் என்றும்
சிறப்பதுண்டு…
தமிழனின் மனிதம் பார்த்தேன்
சுனாமியில்.
அந்த சுனாமியில் எங்கெங்கு காணிணும்
ஓலக்குரல்களே…
அந்த ஓலக்குரலிலே சிக்கியவன்
குமரியிலே….
அதை கண்டு மனம் வெம்பித்
துடித்தவன் இமயத்திலே…
துடித்தவனின் நெஞ்சிலே
உதிர்த்தது மனிதநேயம்…
அதனால் பேரலையின் காயங்கள்
எல்லாம் மாயம்…
எனவே தமிழும் தமிழ்நாடும் தெய்வீகம்
அங்கே சிறந்து விளங்குவது ஆன்மீகம்…
ஆம்! எங்கெங்கு காணிணும் தமிழ்
நெஞ்சமுண்டு….
அந்த நெஞ்சத்திலே தமிழுக்கென்றும்
ஓரிடமுண்டு…..
Posted in கவிதைகள் | No Comments »
May 9th, 2008 by tamizbalan

* காலக்கடலில்
வாழ்க்கை கப்பலுக்கு
கலங்கரை விளக்கம்.
* தகரத்தை தங்கமாக்கி
தங்கத்தை வைரமாக
பட்டை தீட்டூம் வைரம்.
* அறியாமை ஜீவன்களால்
கண்டெடுக்க முடியாத
புதையல்.
* சிகரம் தொட்டவர்களின்
வெற்றிக்கு பின்னால்
ஒளிரும் தாரக மந்திரம்.
* மொழி முதலாக
மனிதன் ஈறாக
அனைத்தையும் பாதுகாக்கும்
அறிவுப்பெட்டகம்.
* கல்விப்பாதை தெரியா
பேதைக்கும்
விழிதந்து ஒளிகாட்டும்
வழிகாட்டி.
Posted in கவிதைகள் | No Comments »
April 30th, 2008 by tamizbalan

என் இதயக்கல்லறைக்குள்
புதைத்து விட்ட ஒன்றை…
கோடிக்காக அலைந்து திரிந்து
இழந்து விட்ட ஒன்றை…
தேடி அலைகிறேன் இரவின்
வாசத்தில்-உறக்கமாக…
Posted in கவிதைகள் | No Comments »
April 30th, 2008 by tamizbalan

வாழ்க்கை என்பது வாழ்வதற்கென்றால்
வீழ்ச்சி எதற்காக?
வாழ்க்கை என்பது வீழ்வதகென்றால்
வாழ்வு எதற்காக?
உயர்வும் தாழ்வும் சேர்ந்ததுதான்
வாழ்க்கை…
வாழ்க்கை என்பது வாழ்ந்து
பார்ப்பதற்க்கு என்று நினை….
அதுதான் வாழ்ககையின் முன்னேற்றம்.?
Posted in கவிதைகள் | No Comments »
April 24th, 2008 by tamizbalan

அள்ளி அள்ளி தந்த கடலே-நீ
அள்ளி கொண்டு போனது ஏன்?
தரையை மட்டும் வருடிப்
பார்த்துக்கொண்டிருந்த-நீ
மனித தேகத்தை வருடிப்
பார்த்தது ஏன்?
அம்மா! என்று உனை ஆரத்தழுவ
வந்த மீனவக்குழந்தை
கண்மூடி உறங்குகிறான்!!!!
உனக்குள்ளே - பிணமாக….
அவனை காணாமல் வாடி
தவிக்கின்றது இங்கே
ஒரு கூட்டம்- நடைப்பிணமாக….
மனித கணங்கள் உனக்குள்ளே
மன கணங்கள் எங்களுக்குள்ளே
போதும் உனது சினம்….
இனியும் தாங்காது எமது
மனித இனம்….
Posted in கவிதைகள் | No Comments »
April 24th, 2008 by tamizbalan
தொலைபேசியே!
தூரங்களில் நீ அலைபேசி,
வியாபாரத்தில் நீ விலைபேசி,
காதலிக்காக காத்திருக்கும் தவிப்பில்-நீ
தொல்லைபேசி…
எல்லாத்துறையிலும் பேசவைக்கிறாய்-நீ
மனிதனை - ஆனால்
உனை பேச வைத்த மனிதனை-நீ
பேசவைத்தால்- நீ தான்
நிலைபேசி……
Posted in கவிதைகள் | No Comments »
April 24th, 2008 by tamizbalan
நினைத்து நினைத்து பார்த்தேன்
நினைத்த பின் - உனை
செயலாற்ற நினைத்தேன்.
செயலாய் நீ மாறிய பின்
காணலாய் நீ - என் நினைவில்
நினைவே நீ கூட நிலையில்லையோ?
என் வாழ்வில்.
இப்படிக்கு
மனிதன்
Posted in கவிதைகள் | No Comments »
April 24th, 2008 by tamizbalan

விடியலில் புது விடியல் தந்து
தன் கரம் பற்றி…..
வையமதற்கு இயக்கம் தந்து
மாலையில் மாலையிட்ட மடந்தையை
விட்டுச்செல்லும் கதிரவன்
முதல் அதிசயம்.

பருவம் கண்ட காளையாய்
துள்ளி துள்ளி கரை வந்து
கிடைப்பதை சுருட்டிச்செல்லும்
கள்வனாய்….
ஓயாமல் போராடும் குணம் தரும்
இந்த கடலழகன்
ஓர் அதிசயம்….

மடிக்க முடியா சேலையாய்-விண்
மீன்கள் பூக்கும் சோலையாய்.
தன் குழந்தையை காணவில்லை
என்றால் அழுது துடிக்கும்
தாயாய் - இருக்குமிந்த
இருண்ட வானம்…..
பேரதிசயம்.

தன் தலை உயர்த்தி உயர்ந்தவன்
நான் என்று.
உயர்வதென்றால்
வானம் தொடுபவனாய்….
தாழ்வதென்றால்
சரிந்து மடிபவனாய்….
இன்று வரை வானம் தொட
போராடும் மலை
நான்காவது அதிசயம்.

ஓர் நாளுக்குள்ளே,
செடியன்னையிடம் கருவாகி
மொட்டுவிட்டு பூத்து
மாலையில் மாலையேறாவிட்டால்
உதிர்ந்து அழகின்
நிலையாமையை உணரவைக்கும்
பூக்களும் அதிசயம்தான்.

வருடினால் தீயாய்
சீண்டினால் புயலாய்
வெறுத்தால் சூறாவளியாய்
விரும்பினால் மேகத்தை குளிரூட்டி
மழை தந்து வாழ்விக்கும்
காற்றும் ஓர் அதிசயம்.
Posted in கவிதைகள் | No Comments »
April 24th, 2008 by tamizbalan
இமயங்களின் வரிசையாய்
ஒளியைத்தரும் இரவுச் சூரியன்கள்
இவைகளின் பார்வையில்….
சிராயமைந்த சாலை-கண்ணசைத்தால்
நொடியில் ஊற்றிடும் பாலை.
வாழ வழியின்றி குடிபுகுந்த மனித பொம்மைகள்,
பொம்மைகளின் பார்வையில் ஏக்கங்களின் கோர்வைகள்
கோர்வையின் வாழ வழி கிடைக்குமா?-என்ற
வினாவின் எச்சம்-அதுதான்
இங்கு மிச்சம்…..
Posted in கவிதைகள் | No Comments »